Search

Indrajith Movie Review

Indrajith Movie

வி கிரியேஷன்ஸ் பேனரில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் , நடிகர்  கௌதம் கார்த்திக் ஜோடியாக நடிகையர் சொனாரிகா பதோரியா, அஷ்ரிதா ஷெட்டி என இருவர் நடிக்க ., கலைப்புலியின் கலையுலக வாரிசு இயக்குனர் கலா பிரபு இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் “இந்திரஜித்.”

கதைப்படி .,பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சூரியனிலிருந்து தெறித்துவரும் ஒரு சிறியதுகள் பூமியில் வந்து விழுகிறது. மனிதனுக்கு ஏற்படும், எப்பேர்பட்ட காயங்களையும், தீராத நோய்களையும் குணப்படுத்தும் சக்தி அந்த துகளுக்கு இருப்பதால் சித்தர்கள்அதை ஒரு ரகசிய இடத்தில்  வைக்கிறார்கள்.  வர்கள்கா லத்திற்குப்  பிறகுஅந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்பது தெரியாமலேயேபோய்விடுகிறது.   இதை தொல்பொருள் ஆராய்ச்சியின்பேராசிரியராக  இருக்கும்  சச்சின் கேதகர்  தேட  ஆரம்பிக்கிறார். இவரிடம்  உதவியாளராக  வந்துசேருகிறார்  இந்திரஜித். -கௌதம் கார்த்திக்,  அதேநேரத்தில் , இந்திய  தொல்லியல்துறையைச்  சேர்ந்த  அதிகாரி  ஒருவரும்  அந்தப்  பொருளைத்தே டுகிறார்.  இறுதியில்  அந்த  சக்தி  வாய்ந்தசிறு துகள்  யாரிடம்கிடைத்தது?  சரியான வரிடம்  கிடைத்ததா ?  இல்லையா ..?  அது சரியான வரிடம் கிடைக்க .,  ஹீரோ கெளதம் கார்த்திக் எப்படி உதவுகிறார் ..?என்பதுடன்  இன்னும்  பல ஹாஸ்ய, சுவாரஸ்ய  விஷயங்களை  கலந்து  கட்டி  வித்தியாசமாகவும் ,  விறுவிறுப்பாகவும்  செல்கிறது  “இந்திரஜித்” படத்தின்  மொத்தக்கதையும்,  களமும் !

படத்தில் கதாநாயகராக நடித்திருக்கும் கெளதம் கார்த்திக், தனக்கே உரிய குறும்புத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கறார்.  படத்தில்  சொனாரிகாபதோரியா,  அஷ்ரிதா ஷெட்டி இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும், அவரகளுடன்  கதாநாயகர்  ரொமன்ஸ்  செய்யும்  வாய்ப்பும்  டூயட்  பாடும்  காட்சிகளும்  சொற்ப அளவிலேயேஇருக்கிறது!

சொனாரிகா சில ஆரம்ப காட்சிகளில் வந்து காணாமல் போனாலும் அஷ்ரிதா ஷெட்டி ., கெளதம் கார்த்திக் குழுவினருக்கு அருணாச்சல பிரதேசத்தில் உதவி செய்யும் பெண்ணாகபடம் முழுக்க வந்து ஆறுதல் அளிக்கிறார்… என்பது கூடுதல் ப்ளஸ்!

மேலும் படத்தில் இடம் பிடித்திருக்கும் ஒவ்வொரு பாத்திரமும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர் என்பது மேலும் , பெரிய ப்ளஸ்!

காட்டுக்குள் நடக்கும் ஜீப் சேசிங்காட்சிகளையும், அழகிய அடர்ந்த காட்டின்ரம்மியத்தையும் அழகாகப் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் இராசாமதி.

கே.பி. இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். மேலும் , அதிரடி பின்னணி இசை, கதையின் சவாலான ஓட்டத்திற்கு பெரிதும் உதவிஇருக்கிறது. வாவ்!

ஏதோ ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பொருளையோ , பொக்கிஷப் புதையல்களையோ தேடிப் புறப்படும் பல கதைகள் தமிழ் சினிமாவிலும் , இந்தியசினிமாக்களிலும்  வெளிவந்திருந்தாலும், ஹாலிவுட்படங்களைப் போல எதையும்குறிப்பிட்டுச்  சொல்ல  முடியாது. தொழில்நுட்பக்  குறைபாடுகளால்  பல தமிழ்ப்  படங்கள்  தோல்வியை  சந்தித்து  இருக்கிறது. ஆனால்,’இந்திரஜித்’ படம் சிறந்த ஆக்ஷன் அட்வென்ச்சர்படமாக வெளிவந்திருக்கிறது… என்பது பெரிய ஆச்சர்யம் .

இளம் இயக்குனர் கலா பிரபு ., புதையல் தேடும் கதையைஅறிவியல் ரீதியாக மாற்றி கலர்புல் பேன்டஸியாக சொல்ல முயற்சித்திருக்கிறார் . கண்களைக் கவரும் சிஜி -கிராபிக்ஸ், காட்சிகள் கைத்தட்டி ரசிக்கும் படி இருக்கிறது. பலகாட்சிகள் பார்க்கும் போது, படுபிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும்  இருக்கிறது  என்பது  இப்படத்திற்கு  பெரிய  ப்ளஸ்.

திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பு, சுவாரஸ்யம் சேர்த்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்….  என்றாலும்  தொழில்நுட்பத்தில் “இந்திரஜித் ‘ – ‘தந்திர ஜித்தனாக ஜொலிக்கிறான்!”

ஆக மொத்தத்தில், ‘இந்திரஜித்’- ‘டெக்னிக்கலாக செம ஜித்தன்!”
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *