அநேகன் விமர்சனம்
நடிப்பு: தனுஷ், கார்த்திக்
இசை: ஹாரிஸ்
இயக்கம்: கே.வி.ஆனந்த்
முன்ஜென்ம பிரிந்த காதல் மறுபடியும் இணைய துடிக்கும் பிரம்மிப்பு கலந்த காதல்
பர்மாவில் ஆரம்பிக்கும் காதல் சில காரணங்களினால் இழப்பினை எதிர் கொள்கிறது. வியாசர்பாடி கலக்கும் தனுஷ் ஒரு சண்டையின் பொது ஹீரோயினை சந்திக்கிறார். தனுஷுக்கு உதவும் அவர் மீது காதல் கொள்கிறார் தனுஷ். இந்த காதலும் தோல்வியில் முடிகிறது. இந்த காதல் பிரிவுக்கு யார் காரணம் என்பது படத்தின் பிற்பாதியில் தெரிய வருகிறது. நிகழ்காலத்தில் இருக்கும் காதல் ஜோடி முன்ஜென்ம காதலினை நினைவுக்கு கொண்டு வர முயற்சி செய்கிறது. இதன் விளைவாக பர்மா காதல், வியாசர்பாடி காதல் எல்லாமே நினைவுக்கு வருகிறது. இதற்க்கு எல்லாம் யார் காரணம். இந்த காதல் ஜோடி ஓன்று சேர்ந்தார்கள என்பது மீதி கதை.
படத்தில் முன்று விதமான கதாபாத்திரங்கள் என்றாலும் தனுஷ் மிக கச்சிதமாக செய்திருக்கிறார். அதிலும் வியாசர்பாடி தனுஷ் இன்னும் கொஞ்ச நேரம் வர மட்டார என்று கேக்கும் அளவிருக்கு அருமை.
படத்தில் நாயகிக்கு முக்கிய வேடம். அவரை சுற்றி தான் கதை நகர்கிறது என்பதினால் பாத்திரம் அறிந்து அருமையாக செய்துள்ளார்.
பாடல்கள் பெரியதாக மனதில் இல்லை என்றாலும் அனைத்துக்கும் சேர்த்து டங்காமாரி பாடலில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆட்டம் போடா செய்கிறது. படத்தின் நீளத்தினை குறைத்திருக்கலாம். நவரச நாயகன் கார்த்திக் அலட்டிக்காத நடிப்பு அனைவரையும் பிரம்மிக்க வைக்கிறது
படத்தின் முக்கிய பலம் என்று பார்த்தல் படத்தின் இயக்குனர் தான் மிக சிரமமான கதைக்கலாம் ஆனால் அதனை கையாண்ட விதம் அருமை. படத்தின் சில இடங்களில் தொய்வு ஏற்படுகிறது படத்தின் திரைக்கதையினை இன்னும் கொஞ்சம் அழகாக செய்திருக்கலாம். படத்தின் கட்சிகள் சில நேரங்களில் மகதீரா படத்தினை ninaivukku கொண்டு வருகிறது. கேமரா, காதல் காட்சிகளும் அனைத்தும் சரியான கலைவை. லாஜிக் எல்லாம் தூக்கி போட்டு படத்தினை மட்டும் பார்த்தால் உங்களை கண்டிப்பாக திருப்தி படுத்துவார் டங்காமாரி.