Search

Yuvan Counting 6 , 7 , 8 in Masss film

yuvan

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்பவர் யுவன் சங்கர் ராஜா. இவருடைய இசையமைத்த பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. கார்த்தி நடிப்பில் வெளியான பிரியாணி படம் இவருக்கு 100வது படமாகும். தற்போது சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘அஞ்சான்’ படத்திற்கு இவர் இசையமைத்துள்ளார். மேலும் இவரது இசையில் ‘தரமணி’, ‘வை ராஜா வை’, ‘வானவராயன் வல்லவராயன்’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா- நயன்தாரா நடிக்கும் ‘மாஸ்’ படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தைப் பற்றி யுவன் கூறும்போது, ‘மாஸ்’ படத்தில் 6, 7, 8 சிறப்பம்சம் உள்ளது என்று கூறினார்.

இதைப்பற்றி தெளிவாக ஆராய்ந்த போது, வெங்கட் பிரபு படத்தில் யுவன் இணைவது 6-வது படம் என்பது தெரியவந்தது. இதற்கு முன் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘சென்னை-28’, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி ஆகிய படங்களில் இசையமைத்துள்ளார்.

அதேபோல் சூர்யா நடிப்பில் யுவன் இசையமைப்பது 7-வது முறையாகும். இதற்குமுன் பூவெல்லாம் கேட்டுப்பார், நந்தா, மௌனம் பேசியதே, பேரழகன், வேல், அஞ்சான் ஆகிய படங்களில் இசையமைத்துள்ளார்.

அதேபோல் நயன்தாரா நடிப்பில் யுவன் இசையமைப்பது 8-வது முறையாகும். கள்வனின் காதலி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, ஏகன், பாஸ் என்கிற பாஸ்கரன், ஆரம்பம் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *