Search

Women Struggle Against Director Ram Gopal Varma

ram-gopal-varma

பிரபல இந்திப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் பேசி சர்ச்சையில் சிக்கி கொண்டார்.

பாலகனின் (விநாயகர்) தலையை துண்டித்த சிவன் ‘அல்கொய்தா’ தீவிரவாதியை விட கொடுமையானவர் என்றும் தன் தலையை காப்பாற்ற முடியாத விநாயகர் மக்களை எப்படி காப்பார்’’ என்றும் விமர்சித்ததால் ராம் கோபால் வர்மாவுக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர். கோர்ட்டிலும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்டதால் தப்பினார்.

இப்போது அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். பள்ளி மாணவன் –ஆசிரியை பற்றிய கதையை மையமாக கொண்டு ‘சாவித்திரி’ என்ற படத்தை அவர் இயக்குகிறார். இதற்கான அறிமுக விழாவில் அவர் படத்துக்குரிய சுவரொட்டியை வெளியிட்டார்.

ஆசிரியையின் இடுப்பழகை 10 வயது மாணவன் முறைத்து பார்ப்பது போலவும், படுக்கையில் கால்கள் தெரியும் நிலையில் படுத்து இருக்கும் ஆசிரியையின் கால் அழகை ஜன்னல் வழியாக மாணவர் எட்டிப் பார்த்து ரசிப்பது போலவும் சுவரொட்டிகள் இருந்தது. இந்த சுவரொட்டி ஐதராபாத்தின் பல இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தது.

படம் பற்றி ராம்கோபால் வர்மா கூறும்போது, ‘‘நான் பள்ளியில் படிக்கும்போது எனக்கு பிடித்தவர் இங்கிலிஷ் டீச்சர். அவர்தான் சாவித்திரி. எனக்கு கிடைத்த சாவித்திரி போல் உங்கள் வாழ்க்கையிலும் பல சாவித்திரிகள் இருப்பார்கள்’’ என்று குறிப்பிட்டார்.

ராம்கோபால் வர்மாவின் இந்த பேட்டிக்கு பல பெண்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. சுவரொட்டி ஒட்டப்பட்ட இடங்களில் அதனை கிழித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ராம்கோபால் வர்மா பொறுக்கிதனமானவர். தனது சினிமா மூலம் மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறார் என்று குற்றம் சாட்டினார்கள்.

புனிதமான ஆசிரியை பணியை அவர் கொச்சைப் படுத்தி உள்ளார். தனது மனதில் உள்ள வக்கிரபுத்தியை வெளிக்காட்டி உள்ளார். அவரை கைது செய்ய வேண்டும், அவரது படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என்று பெண்கள் போராட்டம் நடத்தினார்கள்.

பெண்களின் போராட்டத்துக்கு ராம்கோபால் வர்மா கண்டனம் தெரிவித்து உள்ளார். ‘‘என் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தெரிவிக்க எனக்கு உரிமை உள்ளது. எனவே இதில் எந்த தவறும் இல்லை’’ என்றார்.

இதற்கிடையே குழந்தைகள் நல கமிஷனர் தானாக முன்வந்து ராம்கோபால் வர்மா மீது வழக்கு தொடர்ந்து உள்ளது. இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி ராம்கோபால் வர்மா, சினிமா தணிக்கைகுழு, நகர போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பி உள்ளது. கமிஷன் உறுப்பினர்கள் அச்சுதராவ், மம்தாரகுவீர் ஆகியோர் இந்த சம்மனை அனுப்பி உள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *