Search

I will not do Marriage says Salman Khan

salman-khan

திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று சல்மான்கான் அறிவித்து உள்ளார். 1988–ல் சினிமாவில் அறிமுகமான இவர் இதுவரை 80–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது 48 வயதாகிறது. சல்மான்கானுடன், நிறைய நடிகைகள் இணைத்து கிசு கிசுக்கப்பட்டனர்.

சஷ் சங்கீதா பிஜ்லானி, சோமிஅலி, கத்ரினா கைப் போன்றோருடன் ஏற்கனவே சுற்றினார். தற்போது நடிகை ஜாக்குதலின் பெர்ணான்சுடன் நெருக்கமாக இருக்கிறார். இவரை விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்று செய்திகள் பரவின.

இந்த நிலையில் தான் திருமணமே செய்து கொள்ள போவதில்லை என்று கூறியுள்ளார். டி.வி. நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய அவர், ‘‘எனக்கு திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை. வாழ்க்கை முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்து விட முடிவு செய்துள்ளேன்’’ என்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *