நடிகை ஆண்ட்ரியா கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளார். ஏற்கனவே பல படங்களில் குடும்ப பாங்கான கேரக்டரில் வந்தார். அவர் நடித்த என்றென்றும் புன்னகை படம் நேற்று ரிலீசானது. இதில் மாடல் அழகி கேரக்டரில் கவர்ச்சியாக தோன்றுகிறார். புதிய திருப்பங்கள், விஸ்வரூபம்–2, தரமணி, அரண்மனை என மேலும் 4 படங்கள் கைவசம் உள்ளன.
மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடிக்கிறார். இந்த படங்களிலும் அரைகுறை ஆடையில் அவர் கவர்ச்சியாக வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஆண்ட்ரியாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–
என்றென்றும் புன்னகை படத்தில் எனக்கு நல்ல வேடம். பாராட்டுகள் குவிகிறது. மேலும் சில படங்களில் வலுவான கேரக்டர்களில் நடித்து வருகிறேன். கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பேன். சினிமாவுக்கு வந்த பிறகு இப்படித்தான் நடிப்பேன் என்று நிபந்தனை விதிப்பது சரியல்ல. அதே நேரம் ஆபாசமாக நடிக்கமாட்டேன். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன்.
கவர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கப்படும் படமாக இருந்தாலும் எனது நடிப்பு திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வேன்.
இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார்.