Search

I will not change to christian religion for Amalapaul – AL Vijay

vijay-amalapaul

அமலாபாலுக்கும், டைரக்டர் விஜய்க்கும் திருமணம் முடிவாகியுள்ளது. இது காதல் திருமணம் ஆகும். விஜய் இயக்கிய ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’ படங்களில் அமலாபால் நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.

இவர்கள் திருமணத்துக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். ஜூன் 7–ந் தேதி கொச்சியில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாகவும், 12–ந் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது என்றும் செய்திகள் வந்தன. ஆனால் விஜய் கூறும் போது, அமலாபால் படங்களில் பிசியாக நடிக்கிறார். எனக்கு ‘சைவம்’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டி உள்ளது. இதெல்லாம் முடிந்த பிறகு எங்கள் திருமணம் நடக்கும் என்றார்.

இந்த நிலையில் விஜய்யை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி அமலாபாலும், அவரது பெற்றோரும் வற்புறுத்துவதாக செய்திகள் வந்தன. அமலாபால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். விஜய் இந்து மதத்தை சேர்ந்தவர். இது குறித்து விஜய்யிடம் கேட்டபோது மறுத்தார். எந்த ஆதாரமும் இல்லாம் இந்த செய்தி பரவி உள்ளது. என் மதத்தில் இருந்து வேறு மதத்துக்கு நான் மாற மாட்டேன் என்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *