Search

Vishnu Next is Indru Netru Naalai

vishnu

விஷ்ணு நடிப்பில் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜீவா’. இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இப்படத்தை சுசீந்திரன் இயக்கியிருந்தார். விஷால்-ஆர்யா இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தனர்.

விஷ்ணு தற்போது அடுத்தப் படத்திற்கு தயாராகிவிட்டார். இவர் நடிக்கவிருக்கும் அடுத்தப் படத்தின் தலைப்பு ‘இன்று நேற்று நாளை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரவி இயக்கவுள்ளார். ஹிப்ஹாப் தமிழா புகழ் ஆதி இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். வசந்த் ஒளிப்பதிவை கவனிக்கவுள்ளார்.

இப்படத்தில் விஷ்ணுவிற்கு ஜோடியாக முன்னணி நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரின் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *