Search

Vishal and Bala joins again ?

vishal-bala

பாலா இயக்கத்தில் விஷாலும் – ஆர்யாவும் இணைந்து நடித்த படம் ‘அவன்-இவன்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக பேசப்படாவிட்டாலும், விஷால், ஆர்யாவின் கெட்டப் மற்றும் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், பாலா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் விஷால் நடிக்கப்போகிறாராம். இதுகுறித்து விஷால் கூறும்போது,

அடுத்த வருடத்தில் தேதிகளை தனக்கு ஒதுக்கி வைக்கும்படி பாலா கூறியுள்ளார். இதுகுறித்து பாலா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று கூறியுள்ளார்.

விஷால் நடிப்பில் ‘பாண்டியநாடு’ படம் வரும் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது. இதைத் தொடர்ந்து திரு இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை முடித்தபிறகு பாலா இயக்கத்தில் விஷால் நடிப்பார் என தெரிகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *