Search
Tamil cinema news portal – Exclusive of cinema, the gossips & the real truth.

Vimal Next Movie has Launched

Vimal

விமல் நடித்துள்ள அஞ்சல, மாப்ளசிங்கம் ஆகிய இரண்டுபடங்கள் தயாராக இருக்கின்றன. இவறில் அஞ்சல படம் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து மாப்ளசிங்கம் படம் வெளியாகவிருக்கிறது. இவற்றிற்கு அடுத்து அவர், தனுஷ் மற்றும் விஷாலை வைத்து தலா இரண்டுபடங்களை இயக்கிய பூபதிபாண்டியன் இயக்கத்தில் ஒருபடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு எவ்வித அறிவிப்புமின்றி தொடங்கிவிட்டதாம். டிசம்பர் 21 முதல் பட்டுக்கோட்டை பகுதிகளில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறதாம். இந்தப்படத்தில் விமல் ஜோடியாக மும்பையைச் சேர்ந்த புதுமுகநடிகை ஒருவர் நடிக்கவிருக்கிறாராம். பூபதிபாண்டியன் படங்களில் நகைச்சுவைக்குக் கூடுதல் முக்கியத்துவம் இருக்கும். இந்தப்படமும் அப்படியே இருக்குமென்றும் சொல்கிறார்கள். படத்துக்கு மன்னர்வகையறா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப்பெயர் மாறக்கூடும் என்றும் சொல்கிறார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *