Search

Vijay Sethupathi at Parthiban Film

vijay-sethupathi-parthiban

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ என்ற வித்தியாசமான தலைப்பில் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இதுகுறித்து பார்த்திபன் கூறும்போது,

‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்ட மறுநாளே படப்பிடிப்பு தளத்திற்கு விஜய் சேதுபதி வந்து நின்றார். மன்னிக்கவும், உட்கார்ந்தார். அதுவும் காரில் வந்தால் ரொம்ப நேரம் ஆகிவிடும் என்பதால் பைக்கிலேயே வந்தார்.

கார் கண்ணாடியின் வைப்பரில் சிக்காத இடத்தில் ஒட்டிக்கொள்ளும் பசும் பூவாய் ஒட்டிக் கொண்டது அவரது நட்பூ என்று கவிதையோடு சொல்லி முடித்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *