Search

Vidya Balan to Pairs Up with Ajith ?

vidyabalan-ajith

‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’, ‘வீரம்’ ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து அஜீத் தனது 55-வது படமான கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், அஜீத் அடுத்ததாக ‘வீரம்’ படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்கப் போகிறார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிப்பதற்கு பல்வேறு நடிகைகளை பரிசீலித்து வந்த நிலையில் கடைசியில் ‘த டர்டி பிக்சர்ஸ்’, ‘கஹானி’ ஆகிய படங்களில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற வித்யாபாலனை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, தமிழ் படங்களில் நடிக்க பல்வேறு அழைப்பு வந்தும் அதனை ஏற்காத வித்யாபாலன், அஜீத் படம் என்பதால் இதில் நடிக்க உறுதி கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *