Search

Vetrimaran New Film with Dhanush and Parthiban

VETRIMARAN

தனுஷை வைத்து ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய ‘ஆடுகளம்’ படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து தமிழில் எந்த படமும் அவர் இயக்கவில்லை. மாறாக, இவரது உதவியாளர்கள் இயக்கும் படங்களில் திரைக்கதை எழுதுவது, வசனங்கள் எழுதுவது ஆகிய பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு வெற்றிமாறன், தனுஷ்-பார்த்திபனை வைத்து புதிய படம் ஒன்றை ஆரம்பித்தார். இப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி நடைபெற்றது.

இதையடுத்து, தனுஷ் தன்னுடைய 25-வது படமான ‘வேலையில்லா பட்டதாரி’, கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அனேகன்’, இந்தியில் ‘ஷமிதாப்’ ஆகிய படங்களில் நடிக்க தொடர்ந்து ஒப்பந்தமானதால் இப்படங்களை முடித்துவிட்டு வெற்றிமாறனுடன் இணையலாம் என முடிவெடுத்து அப்படம் முதற்கட்ட படப்பிடிப்போடு முடிவடைந்தது.

இதற்கிடையில் வெற்றிமாறன் குறைந்த பட்ஜெட்டில் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கான பணிகளில் தற்போது தீவிரமாக களமிறங்கியுள்ளார். இப்படத்தை முடித்துவிட்டு தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குவார் என தெரிகிறது. தனுஷ்-பார்த்திபன் இணைந்து நடிக்கும் அப்படத்திற்கு ‘சூதாடி’ என்ற பெயர் வைக்க பரீசிலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *