Search

Vendhar Movies Producing Vishnu Film

vishnu

தமிழில் ‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு. இப்படத்தை தொடர்ந்து ‘துரோகி’, ’குள்ள நரிகூட்டம்’, ‘நீர் பறவை’ ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ‘முண்டாசுப்பட்டி’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நந்திதா நடித்திருந்தார். ராம் குமார் இப்படத்தை இயக்கியிருந்தார். திருகுமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்திற்குப் பிறகு விஷ்ணுவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

‘முண்டாசுப்பட்டி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷ்ணு தற்போது நடித்து வரும் படம் ‘ஜீவா’. இப்படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். இதைத் தவிர சீனு ராமசாமி இயக்கி வரும் ‘இடம் பொருள் ஏவல்’ படத்திலும் நடித்து வருகிறார். இவ்விரண்டு படமும் முடிவடையும் தருவாயில் உள்ளது.

இதையடுத்து விஷ்ணு தற்போது வேந்தர் மூவிஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் பற்றிய முழு விவரமும், இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பட்டியலும் விரைவில் வெளியாகும் என விஷ்ணு குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *