Search

Vaseekaran blasts against Director Cheran

unnamed (1)

unnamed

இயக்குநர் சேரன் அண்ணாவுக்கு,

2011 இல் உங்களை நோர்வே மண்ணுக்கு அழைத்து உலகத்தமிழ் மக்களின் மதிப்பாக “கலைச்சிகரம்” – என்னும் தமிழர் விருது கொடுத்து முதல் கௌரவப்படுத்தியவர்கள் நாங்கள். நீங்கள் தமிழ்நாட்டிலும் சரி. இந்தியாவிலும் சரி வாங்கிய விருதுகளை விட உயர்ந்த விருதாகவே வழங்கினோம்!
இதை நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை! உங்கள் உழைப்புக்கு நாங்கள் வழங்கிய பெரிய அங்கீகாரம் அது.

நீங்கள் இங்கே வந்து உங்கள் திரைப்படத்திற்கு மக்கள் குறைந்தளவில் வந்தமைக்கு, “கோ” திரைப்படம் திரையிடப்பட்டபோது விசனம் தெரிவித்தீர்கள். எங்களை நோர்வேயிய தமிழர்கள் என்ற தொனியில் பேசினீர்கள் , மௌனம் காத்தோம், பொறுத்துக்கொண்டோம்.

ஒரு படைப்பாளியின் நியாயமான குரலாக இருந்தது தான் காரணம். ஐந்து வருடங்களுக்கு முன் பேசிய அதே தொனியில்..கொஞ்சம் மேலே சென்று
இன்று ஒட்டுமொத்தமான தமிழர்களையும் திருடர்கள் போல்
சித்தரித்துள்ளீர்கள்.

எங்கள் மக்களுக்காக தமிழ்நாட்டில் நீங்கள் நடாத்திய ஒரு நாள் போராட்த்தை நீங்களே கொச்சைப் படுத்தினீர்கள்.

உங்கள் மேல் உள்ள உரிமை, மரியாதை நிமிர்த்தம் இந்த விமர்சனங்களை
முன் வைக்கிறோம். நீங்கள் திருட்டு விசிடி பற்றி பேசியதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்!

அனால் இன்னும் நீங்கள் “இலங்கைத்தமிழர்கள்தான் திருட்டி விசிடி வெப்சைட் வச்சிருக்காங்க. அவங்களுக்காக போராடுனது அருவெருப்புன்னு சொன்னது ! அந்த மேடைப் பேச்சுக்கு பிறகு அதை மழுப்பியே உங்கள் பதில்கள் உள்ளன!

ஆனந்த விகடனில் ஒரு மாதிரியும்! லங்காசிறி 24 இணையத்தளத்திலும் இரு வேறு விதமான கருத்துக்களை முன் வைக்கின்கிறீர்கள். சகோதரி இயக்குனர் விஜயபத்மாவை உங்கள் வார்த்தைகளால் காயப்படுத்துகிறீர்கள் !
நீயா பேசியது அண்ணா நீயா பேசியது என்று பாடவும் தோன்றவில்லை!

75 வருடங்களுக்கு மேலான தமிழசினிமா வரலாற்றில் நீங்கள் இயக்கிய, நடித்த திரைப்படங்களுக்கு மிக முக்கியத்துவம் இருக்கு அண்ணா . அதற்கு நீங்கள் முன்வைத்த சமூக விழிப்புணர்வுக்கு கருத்துக்களே காரணம். தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையை பிரதிபலித்தது. அதில் பல நேர்மைத்தன்மைகள் இருந்தது.

அதற்காவே உங்களை நாங்கள் தினமும் கொண்டாடினோம். அப்படிப் பண்பும், அறிவும் படைத்த நீங்கள் நேற்று முன்தினம் பேசியது சரியா?

நீங்கள் நேற்று எங்கள் மக்களின் மேல் சுமத்திய அவதூறு, எங்களை நோகடித்துள்ளது. இத்தனை பேசுகிற நீங்கள் லங்காசிறி 24 இணையத்தளத்திலும், எங்களை நோக்கி பல கேள்விகளை எழுப்பி உள்ளீர்கள் ?

இனி நாங்கள் எழுப்புகிற கேள்விகளுக்கு இதயம் திறந்து பதில் சொல்வீர்களா..?

உங்கள் பதில் இன்னும் எங்களை கோபமடையச் செய்கிறது. நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசியவை பிழை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.!

உலகம் முழுவதும் முகநூல் மூலம் இணைந்து இருக்கிற உறவுகள் உங்களை திட்டித் தீர்த்த வண்ணம் ..இல்லை அதற்கும் மேல ..கழுவி ஊத்துகிறார்கள். அதை நான் ஏற்கவில்லை. “அருவருப்பு” என்ற நீங்கள் கூறிய ஒரு வார்த்தையால் உங்களை குறைத்து மதிப்பிடுவதை நான் விரும்பவில்லை. லண்டனில் 500 குடும்பங்களைத் தெரியும் அவர்கள் நீங்கள் பேசியது சரி என்ற தொனியில் மாற்றி மாற்றி பேசுகிறீர்கள்.

ஒன்று சொல்கிறேன் நாங்கள் இன்னும் ஒரிஜினல் பிரதியிலும், ஹீரோ டாக்கீஸில் காசு கட்டியும், 30 பேர் என்றாலும் நல்ல தமிழ் திரைப்படங்களை திரையரங்கில் தான் பார்க்கிறோம்.! ஒவ்வொரு ஈழத்தமிழன் வீடுகளிலும் எண்ணற்ற அசல் திரைப்படப் பிரதிகளும் அலுமாரிகளில் பொக்கிஷமாக நிறைந்து கிடைக்கிறது.

உங்கள் எண்ணங்களை, செயல்பாடுகளை மாற்றாதவரை, இன்னும் 15 வருடங்கள் நீங்கள் இப்படியே குரல் கொடுக்க வேண்டி வரும். உலகம் மாறிக்கொண்டே இருக்கு அண்ணா. இனி உங்களில் மாற்றம் வேண்டும்.

உங்கள் நாவிளைத்த குற்றத்திற்கான, சரியான, நேர்மையான, மன்னிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

பெரிதாக உணர்வைக் கொட்டி .. ” நான் இறந்தால் எழுதாதீர்கள் என்று சொல்லி ! இந்தப் பேச்சில் இருந்து மீண்டும் தவறு இழைக்காதீர்கள். அது நீங்கள் வாழ்நாள் முழுவதும் செய்த பெரும் பிழையாகும்.!

உங்கள் இன்னொரு படைப்புக்காக தவமாய் தவமிருக்கிறோம்.!

நோர்வேயில் இருந்து உங்கள்
தம்பி
வசீகரன் (வாங்க பேசலாம்)
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *