Varsha is not the heroine of Nagarajachozhan MA MLA
மரியாதைக்குரிய பத்திரிக்கை நண்பர்களுக்கு,
வணக்கம்.. நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ அதாவது அமைதிப்படை இரண்டாம் பாகத்தின் தயாரிப்பாளர்களான சுரேஷ் காமாட்சி மற்றும் ரவிச்சந்திரன் இணைந்து பத்திரிகைகளுக்கு தெரிவிக்கும் ஒரு செய்தி.
எங்கள் படத்தில் நடித்திருக்கும் வர்ஷா அஷ்வதியின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றதை அறிந்தோம். அச்சந்திப்பில் தான் அமைதிப்படை படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பதாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார் என்பதையும் அறிய வந்தோம்.
எங்கள் படத்தில் கதாநாயகிகள் கோமல் ஷர்மாவும், மிருதுளாவும் மட்டுமே. வர்ஷா ஒரு கேரக்டர் ரோலில் மட்டுமே நடிக்கிறார். அதுவும் படத்தில் சில காட்சிகளே வந்து போகும் பாத்திரம் மட்டுமே. இவர், தான் தான் கதாநாயகி என்று பேட்டி அளிப்பது எங்களது வியாபார ரீதியான அணுகு முறைகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது.
எனவே நண்பர்கள் உள்ளதை உள்ளபடி எழுதும்படி கேட்டுக்கொள்கிறோம். வேண்டுமானால் அவர் மற்ற படங்களில் கதாநாயகி என்று சொல்லிக்கொள்ளட்டும்.
நன்றி..