Search
Tamil cinema news portal – Exclusive of cinema, the gossips & the real truth.

Thoda Adrasakka Movie Press Release

thoda-adrasakka-movie-hot-stills-24

மௌனம்ரவி
ஆர்யன்ராஜேஷ் நடிக்கும்
தோடா அட்றா சக்க
எ பூமிஜா சினிமா என்ற படநிறுவனம் சார்பாக D.ரமேஷ்பாபு – D.பிரவீணா தயாரிக்கும் படம் “தோடா அட்றா சக்க”
இந்த படத்தில் ஆர்யன்ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகிகளாக மோனிகாசிங் , இஷாசாப்ரா, ஆகியோர் நடிக்கிறார்கள் மற்றும் கஞ்சாகருப்பு,சென்ட்ராயன்,சுமன்ஷெட்டி, ராஜுகனகாலா ,மையின்கோபி,வாசு, ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் நடன இயக்குனர் சிவசங்கர் நடிக்கிறார்.
பாடல்கள் – சுகுமார்
இசை – ஜான்
வசனம் – வாசு
நடனம் – அஜெய் சிவசங்கர்
தயாரிப்பு – D.ரமேஷ்பாபு, D.பிரவீணா
கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் ஸ்ரீகரபாபு
படம் பற்றி இயக்குனர் ஸ்ரீகரபாபுவிடம் கேட்டோம்…
காதல்,காமெடி,சஸ்பென்ஸ் கதை தான் “தோடா அட்றா சக்க” ஊட்டியில் நாடக கம்பெனி நடத்துபவர் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர்.அங்கே இருப்பவர்கள் டாட்டா – பிர்லா மற்றும் ராயல் மூவரும்.
அவர்களுக்கு திடீர் என்று ஒரு கோடி ரூபாய் பணம் திடீரென்று கிடைகிறது.அவர்களுக்கு அந்த பணம் எப்படி வந்தது? ஏன் வந்தது? அதற்கு பின் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா? என்பதை நகைச்சுவையாக சொல்லி இருக்கிறோம்
டாட்டா – பிர்லா என்ற கதாபாத்திரங்களில் ஆர்யன்ராஜேஷ் – வாசு நடிக்கிறார்கள் ராஜுகனகாலா வில்லன் வேடத்தில் நடிக்கிறார். கஞ்சாகருப்பு முதன் முறையாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார்.
படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் மலேசியா மற்றும் துபாயில் படமாக்கப்பட உள்ளது என்கிறார் இயக்குனர் ஸ்ரீகரபாபு.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *