Search

Thirumavalavan talk About Vizhithiru Movie

Thirumavalavan

’விழித்திரு’ படம் குறித்து விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள் பேசியது,

 

இயக்குநர் மீரா கதிரவன் அவர்களின் அரியப்படைப்பான விழித்திரு படத்தை அண்மையில் பார்த்தேன். இந்தப்படம் மாணவர்களையும் இளைஞர்களையும் வெகுவாக ஈர்க்கும். வகையில் அமைந்திருக்கிறது. தமிழகத்தில், ஏன் இந்தியா முழுவதும் நடைபெறுகிற கௌரவக் கொலை என்னும் ஆணவக் கொலைகளை எதிர்க்க வகையில் இந்த திரைப்படத்தின் மையக்கருத்து அமைந்திருக்கிறது.  ஆணவக்கொலைகளை சாதிய வன்கொடுமைகளை எதிர்க்கும் ஜனநாயக சக்திகளை முற்போக்கு சக்திகளை இந்தப் படம் நிச்சயமாக் ஈர்க்கும். புதிய தோழில்நுட்பங்களை பயன்படுத்தி ஹாலிவுட் படங்களை பார்ப்பது போல இந்தப் படத்தை மிகச் சிறப்பாக அமைத்திருக்கிறார்கள். அதிலே குறிப்பாக ஒளிப்பதிவு, இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட படம் மிக அருமையாக ஒளிப்பதிவு அமைக்கப்ப்ட்டிருக்கிறது.

 

ஒவ்வொரு கட்சியும் கண்கவர் காட்சி என்று சொல்லலாம். அதே போல் சென்னையில் பாண்டிசேரியில் எடுக்கப்பட்ட படம் என்று சொல்லமுடியாத அளவுக்கு இந்த படக்காட்சிகளுக்கான களங்களை தேர்வு செய்திருக்கிறார் மீரா கதிரவன் அவர்கள். நான் கூட படம் முடிந்தவுடன் மீரா கதிரவனிடம் இந்தப்படத்தை எங்கு எங்கு படப்பிடிப்பு தளங்கள் எல்லாம் எங்கே இருக்கிறது என்று வியப்பாக கேட்டேன். அவ்வளவு சிறப்பான கோணங்களில் இருந்து இந்தக் காட்சிகளை எல்லாம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். அதே இசை கேட்பதற்கு ரம்மியமாக இருக்கிறது. அதாவது இளைஞ்ர்களுக்கு பிடிக்கக்கூடிய வகையிலே அமைந்திருக்கிறது. பாடல் மற்றும் முழுநீளப்படம் அனைத்திலும்  இசையமைப்பு என்பது மிகவும் கைதேர்ந்த ஒரு இசையமைப்பாளருடைய இசையாக  அது அமைந்திருக்கிறது. நான் யார் இசையப்பாளர் என்றே கேட்டேன். அதற்கு புதிய அறிமுக இசையமைப்பாளர் என்று மீரா கதிரவன் அவர்கள் சொன்னார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவ்வளவு சிறப்பான முறையிலே திரைப்படத்திற்கு இசை, பாடல்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

 

அரசியல்வாதி எப்படி இங்கே இயங்குகிறார்கள், ஆட்சி நிர்வாகம், குறிப்பாக காவல்துறை எப்படி ஆட்சியாளர்களுக்கு வேலை செய்கிறது என்பதை மிகவும் தத்துரூவமாக பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன் அவர்கள். காவல்துறை சட்டப்படி செயல்படுகிறார்களா? நியாயத்தை நடைமுறைபடுத்துவதற்காக இயங்குகிறார்களா என்றால் ஆட்சி விருப்பபடி செயல்படுவதற்காக மட்டுமே என்பதை மிகவும் தெளிவாக பதிவு செய்துகிறார். அவர்களுக்கு சட்டம் முக்கியம் என்பதைவிட சட்டம் ஒழுங்கு முக்கியம் என்பதைவிட பணியில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதைவிட ஆட்சியாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். எதைச் சொன்னாலும் அதை செய்து முடிப்பதுதான் காவல்துறையின் கடமை.

 

ஒட்டுமொத்தத்தில் இயக்குநர் மீரா கதிரவன் அவர்கள் இளம் தலைமுறையினருக்கு பிடிக்கக்கூடிய வரையில் இயக்கியிருக்கிறார். வெறும் வணிக நோக்கமோ ஆபாசம் என்கிற நிலையிலோ இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சமூகத்தில் நிலவக்கூடிய சிக்கல்களை மையக்கருத்தாக வைத்து தற்கால தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தப் படத்தை அவர் இயக்கியிருக்கிறார். உள்ளபடியே இது தமிழ்தேச உணர்வாளர்களை ஈர்க்கும். சாதிய வன்கொடுமைகளையும், ஆவணக்கொலைகளையும் எதிர்க்கிற ஜனநாயக முற்போக்கு சக்திகளை ஈர்க்கும், நவீன் தொழில்நுட்பத்தை விரும்புகிற புதிய இளம் தலைமுறையினரை ஈர்க்கும் நேர்மையாய் பணியாற்றவேண்டும் என்று நினைக்கிற ஊடகவிலாளர்களை ஈர்க்கும். இயக்குநர் மீரா கதிரவன் அவர்கள் இந்தப் படத்தின் மூலம் மிகச் சிறந்த இயக்குநர் என்பதை நிலைநாட்டியிருக்கிறார்.

 

அவர் மென்மேலும் பல வெற்றிப் படங்களை வழங்கவேண்டும். அவருக்கு தமிழ்ச்சமூகம் குறிப்பாக இளைஞர்கள் பேராதவு வழங்கவேண்டும். அவள் பெயர் தமிழரசி படத்துக்கு பிறகு விழித்திரு இந்த இரண்டாவது படைப்பை மிகச் சிறப்பான முறையிலே இயக்கியிருக்கிற மீரா கதிரவன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். தமிழ் சமூகம் அவரை ஏற்கவேண்டும் போற்றவேண்டும் அவருக்கு உற்றத்துணையாய் நிற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்.