Search

Theme Music for Ajith’s Arrambam

arrambam

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆரம்பம்’. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வரும் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், அஜீத் படங்களில் பெரும்பாலும் இடம்பெறும் தீம் மியூசிக் இவர்கள் வெளியிட்ட இசை ஆல்பத்தில் இடம்பெறவில்லை. எனவே, தற்போது இந்த தீம் மியூசிக்கை உருவாக்கும் பணியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், விஷ்ணுவர்தனும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து விஷ்ணுவர்தன் கூறுகையில், தீம் மியூசிக் என்பது படத்தின் கதைக்கு ஏற்ப பின்னணி இசைக் கோர்ப்பு பண்ணும்போது உருவாவது. அதனால் தீம் மியூசிக், இசை ஆல்பத்தில் இடம்பெறவில்லை. தற்போது ரீ-ரிக்கார்டிங் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். விரைவில் தீம் மியூசிக் ரெடி செய்துவிட்டு, வெளியிடுவோம் என்று கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *