Search

No Theaters given for my film – Meiazhagi Director

meiazhagi

மெய்யழகி’ படத்துக்கு தியேட்டர்கள் தர மறுப்பதாக அப்படத்தின் டைரக்டர் ஆர்.டி.ஜெயவேல் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து டைரக்டர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–

‘மெய்யழகி’ படத்தை குறைந்த பட்ஜெட்டில் கஷ்டப்பட்டு எடுத்துள்ளேன். தணிக்கை குழுவினர் ‘கட்’ இல்லாமல் ‘யு’ சான்றிதழ் அளித்தனர். அரசின் வரிவிலக்கும் கிடைத்துள்ளது. வருகிற 22–ந்தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம்.

ஆனால் சிறு பட்ஜெட் படம் அறிமுகம் இல்லாத நடிகர்கள் என்று சொல்லி இப்படத்துக்கு தியேட்டர்கள் தர மறுக்கிறார்கள். எல்லா தியேட்டர்களையும் இரண்டாம் உலகம் படத்துக்கு ஒதுக்கி விட்டதாக கூறுகின்றனர். தரமான சிறு பட்ஜெட் படங்களை திரையிட விடாமல் தடுப்பது என்ன நியாயம். எங்களுக்கு தியேட்டர் ஒதுக்கி தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த படத்தை வர்ஷினி பிலிம்ஸ் சார்பில் பி.டி.செல்வகுமார் 22–ந்தேதி தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *