Search

Why Thalaivaa not going well at Theaters ?

thalaivaa

விஜய் நடித்த தலைவா சென்ற மாதம் 9ந் தேதி ரம்ஜாண் பண்டிகை அன்று ரிலீசாக இருந்தது. சில பிரச்சினைகள் காரணமாக 19ந் தேதி வெளிவந்தது. சென்னையில் மட்டும் 36 தியேட்டர்களில் ரிலீசானது. இன்று தலைவாவுக்கு 25வது நாள். சென்னையில் 11 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் 8 தியேட்டர்களில் சில காட்சிகள் மட்டும்தான். 25 தியேட்டர்களிலிருந்து படம் வெளியேறி விட்டது. தமிழ்நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசானது. தற்போது சில மாவட்ட தலைநகரங்களில் உள்ள சில தியேட்டர்களில் மட்டுமே 25நாளை தொட்டிருக்கிறது.

“படம் லேட்டாக வெளியானதோடு அண்டை மாநிலங்களில் முன்பே ரிலீசாகிவிட்டதால் எல்லையோர மாவட்ட மக்கள் படத்தை அங்கு பார்த்துவிட்டார்கள். ரிலீசுக்கு முன்பே திருட்டு விசிடி வெளிவந்து விட்டதும், எதிர்மறை விமர்சனங்கள் பரவலாக வெளிவந்ததும் சேர்ந்து படத்துக்கு மைனசாக அமைந்து விட்டது. தப்போது ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டர்களில்கூட 50 நாளை தாண்டாது என்றே நினைக்கிறோம்” என்று தியேட்டர்காரர்கள் கூறுகிறார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *