Search

Tamannah Replaced Nayanthara at Boss Engira Baskaran 2 ?

tamannah

பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் 2–ம் பாகம் தயாராகிறது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 2010 செப்டம்பரில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. ஆர்யா–நயன்தாரா ஜோடியாக நடித்து இருந்தனர். சந்தானம் காமெடியனாக வந்தார். ராஜேஷ் இயக்கினார்.

இதன் இரண்டாம் பாகத்தை எடுக்குமாறு ரசிகர்களிடம் இருந்து வற்புறுத்தல்கள் வந்தன. ஆர்யாவும் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசைப்பட்டார். இதையடுத்து படவேலைகள் துவங்கியுள்ளன.

இதில் ஆர்யா ஜோடியாக நடிக்க நாயகி தேர்வு நடந்தது. நயன்தாராவையே நடிக்க வைக்கலாமா என பரீசிலிக்கப்பட்டது. தற்போது அவருக்கு பதில் தமன்னாவை தேர்வு செய்துள்ளனர்.

தமன்னா தற்போது இரு இந்தி படங்களில் நடித்து வருகிறார். ‘பாகுபலி’ தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். ஒரு தெலுங்கு படத்தில் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். இப்படங்கள் முடிந்ததும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கு வருகிறார்.

தமன்னா கூறும்போது, ‘இந்தி படங்களில் நடித்தாலும், தமிழ், தெலுங்கு படங்களை விட்டு விலகமாட்டேன். தமிழில் தொடர்ந்து நடிப்பேன்’ என்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *