Search

Surya will meet Adopted Village People

surya

சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதும், முதன் முதலில் ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்கியவர் சூர்யா. இந்த தொகை சிவக்குமார் குடும்பம் சார்பாக நடிகர் சங்க தலைவர் நாசரிடம் வழங்கப்பட்டது.

இப்போது திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நெல்லை, கச்சூர், கெரகம்பாக்கம் ஆகிய 3 கிராமங்களை தத்தெடுத்துள்ளார். இந்த கிராமங்களை தத்தெடுத்தது ஏன் என்பது பற்றி கூறிய சூர்யா…

‘இந்த பகுதியில் இருளர்கள் அதிகம் வசிக்கிறார்கள். ஆனால் தகுந்த ஆதாரங்களை கொடுக்க முடியாததால் இவர்கள் அரசின் சலுகைகளை பெறமுடியாத நிலையில் உள்ளனர். இந்த மழை வெள்ளத்தில் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இங்குள்ள குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து இல்லாமலும், பள்ளிக்கு செல்லாமலும் இருக்கிறார்கள். இவர்கள் வாழ்வை சீரமைக்க இருக்கிறோம் என்றார்.

இதற்காக சூர்யாவின் ‘அகரம்’ அறக்கட்டளை சார்பில் ரூ. 25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் மற்றும் தேவையான உதவிகளை செய்வதற்கு கூடுதல் தொகை தேவைப்பட்டால் அவற்றை திரட்டி வழங்கவும் சூர்யா முடிவு செய்து இருக்கிறார். விரைவில் இந்த கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய உடனடி தேவைகளை அறியவும் சூர்யா திட்டமிட்டுள்ளார்.