Search

Surya Supports to Clean India Scheme

surya

காந்தி ஜெயந்தியன்று ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பிரதமரின் இந்த திட்டத்திற்கு பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சூர்யாவும் பிரதமரின் இந்த மகத்தான திட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தெய்வீகத் தன்மைக்கு அடுத்தப்படியானது தூய்மை என்றார் தேசப்பிதா மகாத்மா காந்தி. தூய்மை, ஆரோக்கியத்திற்கு முன்னோடி. சுத்தம், சுகாதாரம், தூய்மை ஆகியவையே இன்றைய தேவை. நம்மையும் நமது இல்லத்தையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வது முக்கியமானதாகும். இது ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

நமது குழந்தைகளுக்கு செல்வத்தை அளிப்பது எவ்வளவு முக்கியமோ, தூய்மையான சுற்றுச்சூழலை அவர்களுக்கு அளிப்பது அதைவிட முக்கியமானது. ஆரோக்கியமான இந்தியாவிற்கு, சுத்தமான இந்தியாவை உருவாக்குவோம்.

பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை பாரத இயக்கத்தில் இணைந்து, அதற்கு ஆதரவு தாருங்கள்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.