Search

Surya to act in Ranjith Film ?

surya

கார்த்தி நடிப்பில் வெளியாகி சமீபத்தில் சூப்பர் ஹிட்டான படம் ‘மெட்ராஸ்’. இப்படத்தை அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கியிருந்தார். இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் இப்படத்திற்கு கொடுத்தனர்.

மெட்ராஸ் படத்தை பார்த்து விட்டு, தன்னை மிகவும் கவர்ந்து விட்டதாக கூறிய சூர்யா, ரஞ்சித்துடன் ஒரு படம் பண்ண வேண்டும் என எண்ணி தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனத்தில் ரஞ்சித்தை இயக்கவைக்க முடிவு செய்துள்ளார்.

சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கிவரும் ‘மாஸ்’ படத்தில் நயன்தாரா, எமிஜாக்சனுடன் இணைந்து நடித்துவருகிறார். விக்ரம் குமார் மற்றும் ஹரி இயக்கவிருக்கும் படங்களில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. ரஞ்சித்தும் ஆர்யாவை வைத்து படம் இயக்கவுள்ளதாகவும் தகவல் வந்தது. ஆகவே சூர்யா-ரஞ்சித் இணையும் படம் அடுத்த வருடம் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.