Search

Sri Divya Interested to Pairs Up with Vijay

sridivya

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. தொடர்ந்து விஷ்ணுவுக்கு ஜோடியாக ‘ஜீவா’ படத்திலும் நடித்தார். தற்போது ‘வெள்ளக்காரத்துரை’, ‘பென்சில்’, ‘காக்கி சட்டை’, ‘ஈட்டி’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

‘காக்கி சட்டை’யில் சிவகார்த்தி கேயன் ஜோடியாக நடிக்கிறார். அவருடன் ஸ்ரீதிவ்யாவுக்கு இரண்டாவது படம் ஆகும். ‘வெள்ளக்காரதுரை’யில் விக்ரம் பிரபு ஜோடியாக நடிக்கிறார். இந்த படம் கிறிஸ்துமசுக்கு ரிலீசாகிறது.

இந்நிலையில் ஸ்ரீதிவ்யா அளித்த பேட்டி வருமாறு:– ‘வெள்ளக்காரதுரை’ படத்தில் முக்கிய கேரக்டரில் வருகிறேன். இந்த படம் எனக்கு திருப்பத்தை ஏற்படுத்தும். கிறிஸ்துமசுக்கு இப்படம் வருகிறது. ‘காக்கி சட்டை’ படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது.

தமிழ் பட உலகில் என்னை கவர்ந்த நடிகர் விஜய்தான். துறுதுறுவென துடிப்பாக வருகிறார். அவரது நடனம் மிகவும் பிடிக்கும். விஜய் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

இவ்வாறு ஸ்ரீதிவ்யா கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *