Search

Sonamkapoor Advice to her Brother

sonamkapoor

இந்திய திரையுலகில், வாரிசுகள் வரவு, நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேஇருக்கிறது. பாலிவுட்டின் மாஜி ஹீரோ அனில் கபூர், தன் மகள், சோனம் கபூரை களத்தில் இறக்கி விட்டார். துவக்கத்தில் சொதப்பினாலும், இப்போது, “ராஞ்சனா போன்ற படங்களின் மூலம், இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகையாகி விட்டார். இதையடுத்து,”இதுதான் சரியான வாய்ப்புஎன, தன் மகன், ஹர்ஷவர்த்தனையும்,களத்தில் இறக்கி விட்டுள்ளார், அனில் கபூர்.

ராகேஷ் ஓம்பிரகாஷ் என்ற இயக்குனர், தன் படத்தில் நடிப்பதற்காக, சமீபத்தில் ஹர்ஷவர்த்தனை அணுகியுள்ளார். ஆனால்,மிகப் பெரிய பட்ஜெட்டில் தான், முதலில்அறிமுகமாக வேண்டும் என்பதற்காக,ஹர்ஷவர்த்தனும், அவரின் தந்தை அனில்கபூரும் மறுத்து விட்டனராம். இந்தவிஷயத்தை கேள்விப்பட்ட, சோனம் கபூர், “ஓம்பிரகாஷ் மிகச் சிறந்த இயக்குனர். அவர்படத்தில் அறிமுகமானால், நல்ல எதிர்காலம் கிடைக்கும் என, சிபாரிசு செய்யவே, இப்போது அந்த படத்தில் நடிக்க சம்மதித்து உள்ளாராம், ஹர்ஷவர்த்தன். சோனம்கபூரின் இந்த பெருந்தன்மையை பார்த்து, அவரை மாய்ந்து, மாய்ந்து புகழ்ந்துதள்ளுகிறார், ஓம்பிரகாஷ்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *