Search

There is no smoking scenes in my film – Cheran

cheran

சர்வானந்த், நித்யாமேனன் ஜோடியாக நடிக்க சேரன் இயக்கியுள்ள புதிய படம் ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’. இதன்படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. படம் குறித்து டைரக்டர் சேரன் அளித்த பேட்டி வருமாறு:–

ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை தமிழ், தெலுங்கில் நேரடி படமாக வருகிறது. அதிக பொருட்செலவில் எடுத்துள்ளேன். காட்சிகளில் ஆடம்பரம் தெரியும். கதையும் பிரமாண்டமாக இருக்கும். இந்த காலத்து இளைஞர்களுக்கு பிடித்த மாதிரி உருவாகியுள்ளது.

புகை பிடிக்கும் காட்சிகள் இல்லாத படம். மது வேண்டாம் என்று சொல்லுகிற படம். இதில் குட்கா முகேஷ் விளம்பரத்தை இணைக்க வேண்டாம் என்று தணிக்கை குழுவினரை கேட்டுக்கொள்ள இருக்கிறேன்.

எனது ‘தவமாய் தவமிருந்து’ படம் பார்த்து பலர் தந்தையரை தேடிச் சென்றனர். ‘ஆட்டோகிராப்‘ படம் பார்த்து பழைய காதலியை தேடினார்கள்.

‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படம் பார்த்து இளைஞர்கள் தங்கள் பொறுப்புகளையும், கடமைகளையும் உணர்வார்கள். ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படம் அடுத்த மாதம் 20–ந் தேதி ரிலீசாக உள்ளது. இதையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே திறமை அறியும் போட்டிகள் நடத்தி பரிசுகள் அளிக்கப்பட உள்ளன.

படத்தில் இடம் பெறும் நான்கு பாடல்கள் ஒன்றாகவே வெளியாகியுள்ளன. அந்த பாடல்களுக்கு அவரவர் கற்பனை படகாட்சிகளை படமாக்கி அனுப்ப வேண்டும். அதில் சிறந்தவற்றை தேர்வு செய்து ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். அத்துடன் திறமையான மாணவர்களை தேர்வு செய்து எனது அடுத்த படத்தில் நடிக்கவும், உதவி இயக்குனராக பணி செய்யவும், ஒளிப்பதிவாளராக பணியாற்றவும் வாய்ப்புகள் அளிக்கப்படும்.

இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்று வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.