Search

My Sister Marriage is not Cancelled – Iniya

iniya

வீட்டில் திருடிய காதலனுடன் நிச்சயமான சகோதரி திருமணத்தை ரத்து செய்யவில்லை என்று இனியா கூறினார்.

தமிழில் வாகை சூடவா, மவுன குரு, மாசானி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் இனியா. இவருக்கு சுவாதி என்ற அக்கா இருக்கிறார். இவர் மலையாளத்தில் டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். திருவனந்தபுரம் கரமணை அருகே உள்ள மருதூர்க்க கடவு என்ற பகுதியில் வசிக்கின்றனர்.

சுவாதிக்கும் அதே ஊரை சேர்ந்த ஷாபின் என்பவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இதற்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதித்தனர். சுவாதி, திருமணத்துக்காக நகைகள் வாங்கப்பட்டது. அந்த நகைகளும், ரூ.5 லட்சம் ரொக்கப் பணமும் திடீர் என திருட்டு போனது.

போலீசார் விசாரணை நடத்தி ஷாபின் திருடியதாக கைது செய்தனர். இதனால் இனியா குடும்பத்தினர் அதிர்ச்சியானார்கள். சுவாதிக்கும் ஷாபினுக்கும் நிச்சயமான திருமணம் ரத்தாகலாம் என பேசப்பட்டது.

இது குறித்து இனியாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

என் சகோதரி திருமணத்தை நாங்கள் ரத்து செய்யவில்லை. அது மாதிரி எந்த திட்டமும் இல்லை. வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. இந்த விஷயம் குறித்து என் சகோதரியிடம் இது குறித்து எதுவும் நான் பேசவில்லை.

ஷாபின் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர். அவரது குடும்பம் எங்களை விட வசதியானது. ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு ஷாபின் வந்தார். என் அக்காவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். என் பெற்றோர் ஷாபின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து பேசினர். அதன் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிவானது.

ஷாபினுக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். தவறானவர்களுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு இருக்கலாம். அவர்கள் நிர்பந்தத்தினால் இப்படி செய்து இருக்கலாம். உண்மையான குற்றவாளி இன்னும் சிக்கவில்லை.

இவ்வாறு இனியா கூறினார்.