Search

Saranya refused to act in Kiss Scene

saranya

அகில், சரண்யா நாக் நடிக்கும் படம், ‘ரெட்டவாலு’. படத்தை இயக்கும் தேசிகா கூறியதாவது: காதலுக்காக பெற்றோரை தூக்கி எறியும் பிள்ளைகள், பெற்றோருக்காக காதலை ஏன் எறியக்கூடாது என்ற கேள்வியை வலியுறுத்தி படம் உருவாகியுள்ளது. இப்போது காமெடி படங்கள் அதிகமாக வருகிறது. அந்த டிரெண்டை மாற்றக்கூடிய வகையில், இந்தப் படம் இருக்கும். சோனா வில்லியாக நடிக்கிறார். அகில், சரண்யா நாக் இருவரும் முத்தக் காட்சியில் நடிக்க மறுத்தனர். கதையின் அவசியத்தை வலியுறுத்தி நடிக்க வைத்தேன். கோவை சரளா, ஜோமல்லூரி, பசங்க சிவகுமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விரைவில் ரிலீசாகிறது.