Search

Santhosh Sivan to competite with Rajinikanth

santhosh-sivan

கடந்த 2011-ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த படம் ‘மரகமஞ்சு’. இப்படம் பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மனுக்கும், அவருக்கு மாடலாக இருந்த ஊர்வசி என்ற பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட காதலை மையமாக கொண்டு வெளிவந்தது.

இதில் ராஜா ரவிவர்மனாக சந்தோஷ் சிவனும், பழைய நடிகை ராதாவின் மகள் கார்த்திகா ஊர்வசியாகவும் நடித்திருந்தனர். கார்த்திகா இதுவரை எந்த படங்களிலும் காட்டாத கவர்ச்சியும், சந்தோஷ் சிவனுடன் நெருக்கமாகவும் நடித்திருந்த இந்த படம் மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தை லெனின் ராஜேந்திரன் என்பவர் இயக்கியிருந்தார். மது அம்பாட் ஒளிப்பதிவு செய்திருந்தார். நித்யா மேனன், மல்லிகா கபூர், பூர்ணா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

தற்போது 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தமிழில் இப்படத்தை ‘அப்சரஸ்’ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். மாணக்யா பிலிம் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் இந்த படத்தை வருகிற 23-ந் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கோச்சடையான்’ படமும் இதே தேதியில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *