1993-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு மும்பை தடா கோர்ட் 5 ஆண்டு தண்டனை விதித்தது. 18 மாதங்களை சிறை தண்டனை அனுபவித்த சஞ்சய் தத் ஜாமீனில் வந்தார்.
பின்னர் தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததுடன், தடா கோர்ட் அளித்த தீர்ப்பை கடந்த மார்ச் மாதம் உறுதி செய்தது.
ஏற்கனவே 18 மாதங்கள் தண்டனை அனுபவித்துள்ளதால், மீதமுள்ள 42 மாத தண்டனைக் காலத்தை அனுபவிப்பதற்காக புனேயில் உள்ள எரவாடா சிறையில் சஞ்சய்த் அடைக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. தண்டனையை ஆய்வு செய்யக்கோரி எந்த மனுவும் இனி தக்கல் செய்ய முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.
இதனால் சஞ்சய் தத்துக்கு இருந்த கடைசி சட்ட நம்பிக்கையும் இழந்தது.