Search
Tamil cinema news portal – Exclusive of cinema, the gossips & the real truth.

Sanakhan rejected Surya’s Film Offer

sana-khan

நடிகர் சல்மான்கானுடன் நடிக்கும் ‘ஜெய் ஹோ’ திரைப்படத்திற்காக இந்தி நடிகை சனாகான் முழு ஈடுபாட்டுடன் நடித்து வருகின்றார். இந்தப் படம் வெளியாவதற்குமுன் வேறு எந்தத் திரைப்படத்திற்கும் தேதிகள் அளிக்க அவர் விரும்பவில்லை.

இந்நிலையில் நடிகர் சூர்யா-இயக்குனர் லிங்குசாமி கூட்டணியில் உருவாக இருக்கும் புதுப்படம் ஒன்றிற்கான பாடல் காட்சிக்காக சனாகானை அணுகியபோது அவர் அதனை மறுத்து ஒதுக்கியுள்ளார். சல்மான்கானுடன் அவர் நடித்துள்ள படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. இதற்கான விளம்பர வேலைகளிலும் அவர் இணைந்து செயல்பட உள்ளதால் புதிய படங்கள் எதையும் அவர் ஏற்க விரும்பவில்லை என்று அவருக்கு நெருங்கிய தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சனாகான் கூறும்போது, சல்மானுடன் நான் நடிக்கும் படம் விரைவில் வெளியாக உள்ளது. அது எனக்கு ஒரு பெரிய படமாக அமையும். இந்தப் படம் வெளியிடும் நேரத்தில் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அறிமுக நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டியிருப்பதால் புதிய படங்களுக்கு நேரம் ஒதுக்குவதென்பது கஷ்டமாக இருக்கக்கூடும்.

இந்த முறை தமிழ்ப்பட வாய்ப்பை மறுத்தாலும் பின்னர் நிச்சயம் நடிப்பேன். சூர்யா-லிங்குசாமி கூட்டணியில் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மீண்டும் பெறுவேன் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *