சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்தவர் டைரக்டர் சமுத்திரகனி. அதன் பிறகு ஈசன், சாட்டை ஆகிய படங்கள்,அவருக்கு, நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தன. அதனால், வித்தியாசமான, உணர்வுப்பூர்வமான வேடங்கள் என்றால் கூப்பிடு, சமுத்திரகனியை என்று சொல்லும் அளவுக்கு ஒரு இடத்தை பிடித்து விட்ட சமுத்திரகனி, தற்போது மலையாளத்திலும் வசந்தத்திண்டே கானல் வழிகள் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், அவரது திறமைக்கு சவால் விடும் வகையில் ஒரு அழுத்தமான வேடம் கிடைத்துள்ளதாம். அதனால், இப்போது அவர், அடிக்கடி கேரளா பறந்து விடுகிறார்.