Search

Saindhavi in “Kannan en Kadhalan” Recent Thematic Presentation

Saindhavi in “Kannan en Kadhalan” Recent Thematic Presentation

கண்ணன் என் காதலன் சினிமா படப்பெயர்தான் சமீபத்தில் சைந்தவி நிகழ்த்திய வித்யாசமான இசை நிகழ்ச்சியின் பெயரும் அதுவே. கண்ணன் மேல் கொண்ட காதலை மீராவாய், ராதாவாய், யசோதையாய் அவர் பாடியது அற்புதமாக இருந்துது. இறை வணக்கமாக ஸ்ரீமன்னரயணாவில் தொடங்கி குறை ஒன்றும் இல்லை என்று முடித்த போது அந்த நிகழ்ச்சியில் குறை ஒன்றும் இல்லை தான். ஒவ்வொரு பாடலின் முன்பு அதை பற்றிய வர்ணனை செல்வி.கிருத்திகா ஷுரஜித் தூய தமிழில் வழங்கியது நம்மை அந்த கால கட்டத்திற்கே அழைத்து சென்று பாடலுடன் ஒன்ற வைத்தது. பெரும்பாலான பாடல்கள் திருமதி. M S அம்மா திரையிலும் மேடைகளிலும் பாடியவை. காற்றினிலே, கிரிதர கோபாலா, நந்தபாலா, ஜகதோதாரனாவில் மெலோடியை குழைத்து கொடுத்த அவர், பக குங்குரூ என்ற ஹிந்தி பாட்டிலும் , மறவேனேவிலும் விறுவிறுப்பை காட்டினார் . அவருடைய ஆசை முகத்தை கேட்டவர்க்கு கண்ணன் முகம் மறக்குமா என்ன? உடல் உருக என்று அவர் விருத்தம் பாடிய பொழுது அரங்கமே உருகியது. இவருடன் இசைத்த பக்கவாத்ய கலைஞர்களை பக்காவத்யம் என்று சொன்னால் அது மிகை ஆகாது. கிபோர்ட் இசைகலைஞர் திரு. a s ராம் மற்றும் புல்லாங்குழல் வாசித்த விஷ்ணு விஜய் அவர்களும் ஓஹோ என்று இசைந்து வாசித்தார். மறவேனே பாடலில் தனியாவர்த்தனம் வாசித்த ராமகிருஷ்ணனின் மிருதங்கமும் வசந்தின் தபலாவும் பலே பலே. இரண்டு மணி நேரம் கொசு கடியையும் மேலே பறந்த விமானங்களின் இரைச்சலையும் மீறி ரசிகர்கள் இறுதி வரை இருந்து ரசித்தது இந்த வித்யாசமான நிகழ்ச்சிக்கு கிடைத்த வரர்வேற்பு என்று சொல்லலாம்.

The recent thematic presentation ‘ Kannan en Kadhalan ‘ by Saindhavi at PSBB millennium school was a unique and different experience. As the title suggests , the concert was based on love for Krishna by Radha , Meera and Yashodha. It comprised of songs sung by Bharat Ratna Smt. M.S.Subhulakshmi and also other popular songs on Krishna . It was a very soulful rendition and many a times the audience were emotionally moved . Starting from the most popular Srimannarayana till Kurai ondrum illai at the end , the concert was like a journey with narration through out which was narrated by Krithika Shurajit. The added advantage of the concert was her accompanists A.S.Ram on the keyboard, Vishnu vijay on the flute, Ramakrishnan on mridangam and Vasanth on the tabla. They travelled very beatifully along with Saindhavi which was a real treat to the ears. Whether it was the melodious giridhara gopala or the peppy pag ghunghuroo or the soulful udal uruga, Saindhavi pulled it off with elan and mesmerised the audience with her voice and soulful rendition. The songs priye charusheele,nandabala , bhujath Shyam and others hit a nostalgic note among the audience . Not to forget Aasai mugam , narayana jagadhodharana and others were beatifully rendered by the whole team. The short and crisp thaniavarthanam played by ramakrishnan and vasanth for the song maravene was enjoyable. The highlight of the concert was that each and every artist on the stage thoroughly enjoyed while singing and playing. A.S.Ram and Vishnu were brilliant in certain background music interludes and are definitely artists who have to be looked out for . The concert turned out to be an experience to remember for everybody who were present there on that day inspite of the mosquitoes and aeroplane noises. It was a very laudable effort by the whole team and makes you look forward for more from the team.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *