Search

Siddha Doctors not insulted in My Film – Bharath

B

 

 

பரத், நந்திதா ஜோடியாக நடிக்கும் படம். ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி. எம்.ஜி.ரவிச்சந்தர் இயக்குகிறார். படத்தில் சேலம் சித்த வைத்தியர்களை விமர்சிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் பரவின. இதற்கு பதில் அளித்து பரத் அளித்த பேட்டி வருமாறு:–

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி எனது 25–வது படம். நிறைய கதைகள் கேட்டு இந்த கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். டைரக்டர் என்னிடம் கதை சொன்னதுமே பிடித்தது. பிறகு அவரை தயாரிப்பாளர்கள் மோகன், புஷ்பா கந்தசாமி போன்றோரிடம் அனுப்பினேன். அவர்களுக்கும் பிடித்தது. முழு நீளகாமெடி படமாக வந்துள்ளது.

எம் மகனுக்கு பிறகு நல்ல கதையாக இது அமைந்துள்ளது. 21 காமெடி நடிகர்கள் நடித்துள்ளனர். முதல் முறையாக படம் முழுக்க காமெடி செய்துள்ளேன். கிராமத்தில் சித்த வைத்திய பரம்பரையில் 5–ம் தலைமுறையாக வரும் சித்த வைத்தியர் கேரக்டரில் நடிக்கிறேன்.

சித்த வைத்தியர்களை புண்படுத்தும் காட்சிகள் இதில் இல்லை. அவர்களை இழிவுபடுத்தவும் இல்லை. செக்ஸ் டாக்டர்கள் பற்றிய படமும் இல்லை. சித்த வைத்தியத்தை பெருமைப்படுத்துவது போலவே படம் இருக்கும். மூன்று மாதத்தில் வேகமாக படப்பிடிப்பை துவக்கி முடித்துள்ளோம்.

இவ்வாறு பரத் கூறினார்.

இந்த பேட்டியின்போது, நடிகை நந்திதா, டைரக்டர் ரவிச்சந்தர், தயாரிப்பாளர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.


TAG


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *