Search

Rajkiran Important Role at Komban Film

Rajkiran

‘அட்டக்கத்தி’ ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘மெட்ராஸ்’. கார்த்தி அதிக நம்பிக்கையுடன் நடித்துள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தையடுத்து ‘குட்டிப்புலி’ இயக்குனர் முத்தையா இயக்கும் ‘கொம்பன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தில் சிங்கம் படத்தில் சூர்யா வைத்திருந்த அருவா மீசை கெட்டப்பில் கார்த்தி நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார்.

அதுமட்டுமில்லாமல், ராஜ்கிரண் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிராமத்து பின்னணியில் உருவாகும் கதை என்பதால் இப்படம் முழுக்க ராஜ்கிரணை மையப்படுத்தியே நகருமாம். அந்த வகையில் பார்த்தால் ‘பாண்டவர் பூமி’, ‘சண்டக்கோழி’, ‘மஞ்சப்பை’ ஆகிய படங்களைப் போன்று ராஜ்கிரணுக்கு இதுவும் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *