Search

Raai Laxmi Attends Shooting with Injury

raai-laxmi

ராய் லட்சுமி தமிழில் ‘சவுகார்பேட்டை’, இந்தியில் ‘அகிரா’ ஆகிய படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பின்போது இவரது கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதனால், படப்பிடிப்பிலிருந்து விலகி சற்று ஓய்வு எடுத்து வந்தார்.

இந்நிலையில், இந்தியில் இவர் நடித்து வரும் ‘அகிரா’ படத்தின் இரண்டாவது படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டதால் தற்போது காயத்தையும் பொருட்படுத்தாமல் இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். அடுத்தடுத்து படப்பிடிப்பு இருப்பதால் காயத்துக்காக நேரம் ஒதுக்க முடியாது என்று இப்படத்தில் கலந்துகொண்டுள்ளார்.

‘அகிரா’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படம் தமிழில் வெளிவந்த ‘மௌனகுரு’ படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா நடித்து வருகிறார். இப்படத்தில் ராய் லட்சுமி போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார். இதுதவிர, தமிழில் ஸ்ரீகாந்துடன் இணைந்து ‘சவுகார்பேட்டை’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் பேய் வேடமேற்று நடித்து வருகிறார்.

Raai Laxmi Attends Shooting with Injury




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *