Search

Press Release from LGBT Organization

LGBT Organization (3)

அண்மையில் வெளியான இருட்டு அறையில் முறட்டு குத்து என்ற தமிழ் திரைப்படத்தில் நம் சமூகத்தின் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதத்தில் உள்ள காட்சிகளை அகற்றக்கோரி திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் திருநங்கைகளின் உரிமைகளுக்காக போராடிவருபவரும் அப்சரா மற்றும் LGBT அமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்
“இருட்டு அறையில் முறட்டு குத்து” என்ற திரைப்படத்தில் திருநங்கைகளை இழிவுப்படுத்தும் வகையிலும் அவர்கள் பாலியல் தொழிலுக்கு உட்பட்டவர்கள்போல் பல இடங்களில் காட்சிப்படுத்தியுள்ளனர். இது சுயகவுரவத்துடன் இந்த சமூகத்தில் வாழநினைக்கும் திருநங்கைகளை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் நிருநங்கைகளை தவறான எண்ணத்திலேயே பார்க்கதோன்றும்.
இந்த திரைப்படத்தை பார்து மனமுடைந்த LGBT மற்றும் அப்சரா ஆகியோர் இணைந்து அத் திரைப்பட குழுவினரை சந்தித்து முறையிட்டனர்.
ஏற்கெனவே இந்த சமூகத்தில் திருநங்கைகள் பல்வேறு இன்னல்களை சந்தித்துவரும் நிலையில் இந்த திரைப்படம் எங்களை போன்றோர்களை மேலும் மனவேதனைக்குள்ளாகியுள்ளது.
இது குறித்து திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் அப்சராவிடம் கூறுகையில், சங்க நிர்வாகிகள் குழுவை வைத்து இந்த திரைப்படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். மேலும் இதிர்காலத்தில் திருநங்கைகளின் மனதைபாதிக்காத வகையில் தமிழ் திரைப்படம் அமையும் என்று உறுதியளித்துள்ளார்.
முன்னதாக மாவட்ட சட்ட ஆணையத்திடம் இது முறையிடப்பட்டுள்ளது. இது குறித்து முழுமையாக விசாரித்தபின் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதாக நீதிபதி ஐசக் ஜெயந்தி உறுதியளித்துள்ளார். சென்னை தோஸ்த் என்ற அமைப்புடன் இணைந்து சென்னை காவல்துறையிடமும் இதுதொடர்பாக முறையிடப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *