Search

Powerstar Srinivasan Films Scheduled for Release

Power-Star-Srinivasan

பல்வேறு மோசடி வழக்கில் சிக்கி உள்ள நடிகரும், சித்த வைத்திய டாக்டருமான சீனிவாசன் இப்போது எந்த சிறையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளிவர காத்திருக்கிறது. அவர் எப்படியும் விடுதலையாகி விடுவார். அவரை வைத்து புரமோஷன் செய்து படத்தை வெளியிடலாம் என்று காத்திருந்தவர்கள். இப்போதைக்கு அவர் விடுதலையாகும் சாத்தியக்கூறுகள் தென்படாததால் அவர் இல்லாமலேயே படத்தை வெளியிட முடிவு செய்து விட்டார்கள்.

கண்ணா லட்டு தின்ன ஆசையாக ஹிட்டானதும், சீனிவாசனுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது என்ற கருதிய ராம.நாராயணன். அவருக்காகவே ஒரு கதை எழுதி உன் போதைக்கு நான் ஊறுகாய் என்ற படத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு தலைப்பை ஆர்யா சூர்யா என்று மாற்றினார். படப்பிடிப்பு முடிந்த கையோடு சீனிவாசனை போலீஸ் அள்ளிக் கொண்டு போய்விட்டது. லட்டுவின் இன்னொரு தயாரிப்பாளரான சந்தானமும் சீனிவாசனை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் யா யா படத்தில் அவருக்கு ஒரு முக்கிய கேரக்டர் கொடுத்தார். சொந்தமாக படம் எடுத்துக் கொண்டிருந்த ஏ.வெங்கடேஷ் அதை அப்படியே போட்டுவிட்டு சீனிவாசனை நம்பி சும்மா நச்சுன்னு இருக்கு படத்தை ஆரம்பித்தார். நல்ல வேளையாக எல்லா படத்தின் படப்பிடிப்புகளும் முடிந்து விட்டது.

இப்போது மூன்ற படங்களும் சீனிவாசனுக்காக காத்திருந்து ஏமாந்து விட்ட நிலையில் அவர் இல்லாமலேயே வெளிவர இருக்கிறது. இந்த மாதம் ஆர்யா சூர்யாவும், சும்மா நச்சுன்னு இருக்கும் படமும் ரிலீசாகிறது. அடுத்த மாதம் யா யா படம் ரிலீசாகிறது. இதுதவிர சீனிவாசன் கெஸ்ட் ரோலில் நடித்த படங்கள், ஒரு பாட்டுக்கு ஆடிய படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *