Search

Pottu Film Press Release

pottu (1)

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “

இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

வசனம் – செந்தில் / ஒளிப்பதிவு – இனியன் ஹரீஷ்

இசை – அம்ரீஷ் / பாடல்கள் – விவேகா, கருணாகரன்,சொற்கோ

ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன் / எடிட்டிங் – எலீசா

கலை – நித்யானந் / நடனம் – ராபர்ட்

தயாரிப்பு மேற்பார்வை – ஜி.சங்கர்

தயாரிப்பு – ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்

கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் – வடிவுடையான்.

படம் பற்றி இயக்குனர் வடிவுடையானிடம் கேட்டோம்..

பக்கா ஹாரர் படமாக இது இருக்கும். படப்பிடிப்பு மொத்தம் 90 நாட்கள் நடைபெற்றது. பரத் இந்த படத்தில் பெண் வேடத்தில் நடித்துள்ளார். நமீதாஇதுவரை நடிக்காத வித்தியாசமான வேடமம் ஏற்றுள்ளார்.தமிழில் ( பொட்டு ), தெலுங்கில் ( பொட்டூ ) , ஹிந்தியில் ( பிந்தி ) என மூன்று மொழிகளில் படம் வெளியாக உள்ளது அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்திற்காக பாடலாசிரியர் ஏக்நாத் எழுதி அம்ரீஷ் இசையில் உருவான “ அடி போடி சண்டாளி “ என்ற பாடல் காட்சியை கேரளாவில் உள்ள அதிரம்பில்லி என்ற இடத்தில் உள்ள அருவியில் பரத் – சிருஷ்டி டாங்கே பங்கேற்க படமாக்கினோம். அந்த பாடல் தற்போது பட்டி தொட்டியெங்கும் பட்டையக் கிளப்பிக்கொண்டு இருக்கிறது.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது பொட்டு என்றார் இயக்குனர் வடிவுடையான்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *