Search

Poorna talks about how rapes happening at India

poorna

சமீபகாலமாக நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பெருகி வருகின்றன. இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், குற்றங்கள் குறையவில்லை.

இளம் பெண்கள் அணியும் கவர்ச்சி உடைகள் பாலியல் குற்றங்களுக்கு தூண்டுதலாய் அமைகிறது என்று விமர்சிக்கப்படுகிறது. சில கல்லூரிகள் மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’, ‘கொடைக்கானல்’, ‘கந்தக்கோட்டை’, ‘துரோகி’, ‘ஆடுபுலி’, ‘வித்தகன்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை பூர்ணா இப்பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:–

பெண்கள் ஆபாசமாக ஆடைகள் அணிய கூடாது. சினிமாவில் நடிகைகள் கவர்ச்சியாக ஆடை உடுத்துகின்றனர். அதை பார்த்து சில பெண்களும் கவர்ச்சி ஆடை அணிகிறார்கள். சினிமாவுக்காக மட்டும் பயன்படுத்தக்கூடிய உடைகள் அவை. பொது இடங்களில் அவற்றை அணிவது சரியல்ல. நடிகைகள் போல் ஆடைகள் அணிய ஆசைப்படக்கூடாது. ஆபாச ஆடைகள் அணிவதை தவிர்த்தால் பாலியல் குற்றங்கள் குறையும்.

இவ்வாறு பூர்ணா கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *