Search

Pizza in Italy Film Festival

pizza

விஜய் சேதுபதி-ரம்யா நம்பீசன் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் ‘பீட்சா’. இப்படத்தை குறும்பட இயக்குனரான கார்த்திக் சுபாராஜ் இயக்கியிருந்தார். வித்தியசாமான திரில்லர் கதையுடன் வெளிவந்த இந்த படம் சென்ற வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்திருந்தது. இப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் சேதுபதிக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்து, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக இருக்கிறார்.

இப்படி பல விதத்திலும் பெருமையை வாங்கிக் கொடுத்த இந்த படத்திற்கு மேலும் ஒரு பெருமை கிடைத்துள்ளது. இத்தாலி திரைப்பட விழாவில் இப்படத்தை திரையிட அனுமதி கொடுத்துள்ளனர். இதுகுறித்து, இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுபாராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:- இத்தாலியில் நடைபெறும் ‘ரிவர் டு ரிவர் பிளாரன்ஸ் 2013 இந்திய சினிமா விழா’வில் என்னுடைய படமான ‘பீட்சா’ படம் திரையிடப்படவிருக்கிறது. இது எனக்கு ரொம்ப சந்தோசமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

‘பீட்சா’ படத்தை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘பீட்சா 2 வில்லா’ என்ற பெயரில் சமீபத்தில் வெளியானது. இப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தை தீபன் சக்கரவர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். ‘பீட்சா’ படத்தை தயாரித்த திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமே இந்த படத்தையும் தயாரித்திருந்தது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *