மௌனம்ரவி
விரைவில் “பப்பாளி’’ ரிலீஸ்
S..அம்பேத் குமார் , A .ரஞ்ஜீவ் மேனன் இருவரும் இணைந்து அரசூர் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் ‘’பப்பாளி’’ இந்த படத்தில் செந்தில் கதாநாயகனாக நடிக்கிறார் இவர் புகழ் பெற்ற சரவணன் மீனாட்சி தொடரின் நாயகன் .
கதாநாயகியாக இஷாரா நடிக்கிறார்.முக்கிய வேடத்தில் சரண்யா நடிக்கிறார் மற்றும் இளவரசு , ஆடுகளம் நரேன் , சிங்கம் புலி , ஜெகன் ,கிருஷ்ணமூர்த்தி , கௌரவ வேடத்தில் நிரோஷ நடிக்கிறார் .
ஒளிப்பதிவு : விஜய்.
இசை ; விஜய் எபிநேசர் .
பாடல்கள் ; யுகபாரதி.
கலை ; விஜயகுமார்
நடனம் ; அசோக்ராஜா.
எடிட்டிங் ; அத்தியப்பன் சிவா
தயாரிப்பு நிர்வாகம் ; D.செல்லத்துரை . தயாரிப்பு மேற்பார்வை D. முருகன்
தயாரிப்பு ; S .அம்பேத் குமார் , A .ராஜீவ்மேனன்
கதை ,திரைக்கதை ,வசனம் எழுதி இயக்குகிறார் A .கோவிந்தமூர்த்தி. கருப்பசாமி குத்தகைதாரர் வெடிகுண்டு முருகேசன் போன்ற நகைச்சுவை படங்களை இயகியவர்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம் ….படத்தின் பாடல் காட்சியான
“ஏதேதோ ஏதேதோ
ஏக்கங்கள் உன்னாலே” என்ற பாடல் காட்சி சமீபத்தில் பாண்டிச்சேரியில் படமானது.இதில் செந்தில் – இஷாரா பங்கேற்றனர். காமெடி படம்தான் பப்பாளி என்றாலும் கருத்துள்ள காமெடியாக இருக்கும்.இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படம் நிச்சயமாக கமர்ஷியல் மட்டுமல்ல நல்ல கருத்துக்களை உள்ளடக்கிய படம் என்று பாராட்டினார்கள். வரிவிலக்கு கமிட்டியை சேர்ந்த பி.வாசு, எல்.ஆர்.ஈஸ்வரி, எம்.என்.ராஜம் போன்றவர்களும் நல்ல படம் என்ற முத்திரையை பதித்தார்கள் என்றார்.
ஏற்கனேவே இந்த இயக்குனர் இயக்கிய கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன் இந்த இரண்டு படங்களின் காமெடி காட்சிகளை ஒளிபரப்பாத சேனல்கள் இல்லை என்றே கூறலாம்.
அது மாதிரியே பப்பாளியும் பரபரப்பாக பேசப் படட்டுமே.
Previous PostNee Enge En Anbe Movie Censor Certificate
Next PostNinaiyae Rathiendru Ninaikiraendi Movie Posters