Search

Who is the pair for Vijay at Simbhudevan Film ?

vijay-priyanka-chopra

நடிகர் விஜய் அடுத்ததாக சிம்புதேவன் இயக்கும் படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகியை தேர்வு செய்வதற்கு பட்டியல் ஒன்றை சிம்புதேவன் தயார் செய்துள்ளார்.

அதில், தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய பாலிவுட் நடிகைகளின் பெயரும் இடம் பெற்றுள்ளது. தற்போது, கோச்சடையான் படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார்.

இது தமிழில் அவருக்கு முதல் படம். இந்நிலையில், அவரை விஜய்க்கு ஜோடியாக நடிக்க கேட்டனர். படத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்த படுகோனே அதற்காக பெரிய தொகை ஒன்றை சம்பளமாக கேட்டார். ஆனால் படத்திற்கான பட்ஜெட்டை விட இது அதிகம் என்பதால் அடுத்த முயற்சியில் படக்குழு இறங்கியது.

அதனை அடுத்து, நடிகை பிரியங்கா சோப்ராவை படத்தில் நடிப்பதற்கு கேட்டனர். படத்தின் கதை மிகவும் பிடித்து போனதால் தமிழில் நடிக்க ஆர்வமானார் பிரியங்கா சோப்ரா. அவரது சம்பள தொகையும் ஏற்கத்தக்கதாக இருந்தது. பிரியங்கா சோப்ரா தமிழன் என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முதலில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *