Search

No Politics in Thalaivaa Movie – Producer Chandiraprakash

Thalaivaa

பிரபல சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின். முன்பு தொடர்ச்சியாக படம் எடுத்தவர் 8 வருட கேப்பிற்கு பிறகு தலைவா படத்தை தயாரித்துள்ளார். படத்தை தமிழ்நாட்டில் வேந்தர் மூவீஸ் ரிலீஸ் செய்கிறது. தலைவா படத்தில் விஜய் நடப்பு அரசியல் பற்றி பேசுகிறார், ஒரு கட்சித் தலைவராக நடிக்கிறார். அரசியல் பன்ஞ் பேசுகிறார் என்று நிறைய வதந்திகள் உலவிக் கொண்டிருக்கிறது.

அதற்கு விளக்கம் அளித்தார் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின். “120 நாள்ல படத்தை எடுத்து முடிச்சோம். மும்பை, ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடந்துச்சு. 50 நாள் செட்டுக்குள்ளேயே படம் எடுத்தோம். நான், இயக்குனர் விஜய், இளைய தளபதி விஜய் மூணு பேரும் உட்கார்ந்து பேசி திட்டமிட்டதால ஒரு நாள் கூட வீணாப்போகாம படப்பிடிப்பு நடந்துச்சு. இயக்குனருக்கு முழு சுதந்திரம் கொடுத்துட்டு ஒதுங்கிட்டேன். என் மகன்களும், தம்பியும் சேர்ந்து தயாரிப்பு வேலைய கவனிச்சுக்கிட்டாங்க.

தலைவான்னு பேர் வச்சிட்டதால இது அரசியல் படமுன்னு நிறைய பேர் புரளிய கிளப்பி விடுறாங்க ஒரு சீன்ல கூட அரசியல் கிடையாது. அரசியல் டயலாக் கிடையாது. மும்பையில இருக்கிற தமிழர்களை அங்கே உள்ள அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் கூட்டம் நிம்மதியா வாழ விடமாட்டேங்குறாங்க. அவர்களை எப்படி விஜய் ஒழிச்சுகட்டி நிம்மதியா வாழ வைக்கிறாரு என்பதுதான் படத்தோட ஸ்டோரி. மும்பை தமிழர்களுக்கு தலைவனா நடிச்சிருக்காருன்னு சொல்லலாம். ஷோலே படத்துக்கு பிறகு இந்தப் படம்தான் ஆல்ரவுண்டுல கலக்கப்போவுது” என்றார் ஜெயின்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *