Search

Naasar to become Nadigar Sangam Head ?

nassar

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நாசர் பின்னால் விஷால் குருப் அணிவகுத்து நின்றது.

விஷால், ஜீவா, நாசர் மூவரும் 33 கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்ல, மூச்சு திணறிப் போகும் அளவுக்கு சரத்குமார் குரூப் சோர்வாக இருந்தது.

ஜீவா கேள்வி கேட்கும்போது , அழுதே விட்டார் ராதிகா. அதற்குப் பிறகுதான் இளைஞர்களுக்கு வழிவிடுவதாகச் சொன்னார்கள்.

அதனாலயே என்னவோ, விஷால் குரூப் நாசரைத் தலைவராக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

அதுமட்டுமல்ல கடந்த 21ம்தேதி நேரு ஸ்டேடியத்தில் நடந்த சினிமா நூற்றாண்டு விழாவிலும் நாசர் எங்கே சென்றாலும் அவர் பின்னாலேயே சூர்யா, கார்த்தி,விஷால்,ஜெயம்ரவி, ஆர்யா என்று நட்சத்திர பட்டாளமே அணிவகுத்து சென்றது.

அடுத்து நடக்கும் நடிகர்சங்க தேர்தலில் இந்த இளம்படை நாசரைத் தலைவராக்க முடிவுசெய்து இருக்கிறதாம்!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *