Search

Mylapore Movie Press Release

1

கணவன்-மனைவி தயாரிப்பு இயக்கத்தில் உருவாகும் ‘மைலாப்பூர்’
அழகாபுரம் அம்மன் ஆர்ட்ஸ் என்னும் பட நிறுவனம் சார்பில் உருவாகும் படம் ‘மைலாப்பூர்’. புதுமுகங்கள் நாயகன், நாயகியாக நடிக்கும் இப்படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவர்களுடன் முன்னணி நட்சத்திரங்கள் சிலரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அதற்கான தேர்வும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி அன்புகனி இயக்க, அவரது மனைவி அனுஷியா அன்புகனி இப்படத்தை தயாரிக்கிறார்.

கோபால் ராவ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இவர் பிரபல கர்நாடக இசை மேதை மதுரை மணி அய்யரின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்காக மூன்று பாடல்கள் சமீபத்தில் ஓலிப்பதிவு செய்யப்பட்டன.

“ஒத்த பாட்டுல மொத்த உலகமும் கல கலக்கும், கொட்டும் மழையில் எட்டு திசையிலும் முணு முணுக்கும்…”

“சாரே சாரே சலாம் சாரே, நானே ஹீரோ நானே வில்லன் அட வாடா தோழா சோடா தா….”

விடியாத இரவு, முடியாத கதை, திறவா கதவு திறக்குமா? சுதந்திரம் அம்மா சூட்சமம் அம்மா”

இவை தான் அந்த மூன்று பாடல்கள்.

ஆழமான, அழுத்தமான கதையைக் கொண்ட படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி, முழுக்க முழுக்க மைலாப்பூரிலேயே நடக்க உள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *