Search

Music Director Aruldev Press Release

aruldev-press-release (1)

aruldev-press-release (2)

aruldev-press-release (3)

பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்களிடம் நீண்ட நாட்களாக கீ போர்ட் பிளேயராக பணியாற்றி பின்பு இந்திய கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் கதாநாயகனாக அறிமுகமான ‘போட்டாபோட்டி 50:50’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக உங்கள் முன் அறிமுகமானேன். இப்படத்தின் பாடல்கள் அருமை, பின்னணி இசைக்கு பாராட்டுகள் என படத்தின் விமர்சனத்தில் என்னை ஊக்குவித்து இருந்தீர்கள். இப்படத்தைத் தொடர்ந்து பாரி, பாக்கணும்போல இருக்கு, நகர்புறம் படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். நகர்புறம் படத்தில் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய ‘மழையே மழையே’ மெலடி பாடல், ஆலாப்ராஜுன் தாலாட்டுக் குரலில் இணைதள ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டுக்களை பெற்றுள்ளது. இன்னொரு மெலடி பாடலான ‘வெயிலே வெயிலே’ பாடலை கவிஞர் யுகபாரதி எழுத கார்த்திக்- மஹதி பாடியிருக்கின்றனர். இரண்டு மெலடிகளும் நன்கு வரவேற்பை பெற்றிருக்கிறது.

சர்வதேச இசையமைப்பாளர்களின் இசைகளை வெளியிட்டு வரும் www.reverbnation.com ஆல்பங்களின் வரிசையில் (www.reverbnation.com/aruldev) தற்போது மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. இதனால் www.reverbnation.com எனது பெயரில் www.reverbnation.com/aruldev/android எனும் ஆண்ட்ராய்டு சாஃப்ட்வேர்கிரியேட் செய்து கொடுத்துள்ளனர். இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நானும் மகிழ்கிறேன். தொடர்ந்துமேலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறேன்.

இந்த தகவலை தங்களின் மேலான பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளங்களில் வெளியிட்டு எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் தகவல் தேவைப்படுகிறவர்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் அன்புடன் அழைக்கலாம். இத்துடன் எனது புகைப்படத்தையும் இணைத்துள்ளேன். உங்களின் மேலான ஆதரவை நாடுகிறேன்.

நன்றி நண்பர்களே!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *