Search

Mohanlal admitted at Hospital

mohan lal

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் கடுமையான கால்வலியால் கடந்த நான்கு நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் சிறிது காலமாகவே அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளபோதிலும் நேரமின்மை காரணமாக சிகிச்சையைத் தள்ளிப் போட்டுள்ளார்.

இப்போது வலி அதிகரித்திருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திரைத்துறைத் தகவல்கள் கூறுகின்றன. ஆரம்பத்தில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரை செய்தபோதிலும் தற்போது மருந்துகள் மற்றும் முழு ஒய்வின்மூலம் இதனை குணப்படுத்திவிட முடியும் என்று கூறியிருப்பதால் அவர் தற்போது முழு ஓய்வில் இருந்து வருகின்றார்.

இதனிடையில் அவரது மருத்துவ அறிக்கைகள் அவர் விரைந்து குணமடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளன. அவரது அடுத்த படமான ‘பெருச்சாழி’யை தமிழ்த் திரையுலகின் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் தயாரிக்கும் சான்ட்ரா தாமஸ் மோகன்லாலின் உடல்நிலை குறித்து தனது வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எங்கள் பெருச்சாழியின் கால் வலி குணமடைந்து இன்னும் நான்கு நாட்களில் அவர் படப்பிடிப்பிற்கு வருவார் என்று கூறப்படுகின்றது.இந்த படத்தின் இசை வெளியீட்டை அவர் செய்யவேண்டும் என்று காத்திருக்கின்றோம். கடவுள் அவருக்கு அருள் புரியட்டும் என்று சான்ட்ரா தனது தகவலில் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *